வாரும் மனந்திரும்பி வாரும் – Vaarum Mananthirumbi Vaarum

வாரும் மனந்திரும்பி வாரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
வாரும், மனந்திரும்பி வாரும், கிறிஸ்துவிடம்
சேரும்; திடமுடனே சேரும்.’
அனுபல்லவி
ஆரும் வரலாம், நித்திய பேறும் பெறலாம்; வந்தோர்
ஆரையும் தள்ளிவிடார்; தாராளமா யெளியோர், –வாரும்
சரணங்கள்
1.தெருக்கடோறு மலைந்த தீயர்க்கு மிடமுண்டு;
சிதறி வேலிகடோறும் திரிந்தோரையும் பண்டு
உருக்கமுட னழைத்த திருக்கருணையுங் கண்டு
உள்ளநோய் துயரோடு மெள்ளத் தள்ளாடிக்கொண்டு, -வாரும்
2.தாழ்வோடழுது தியங்கும் நிர்ப்பந்தரும்
தம்பவச் சேனையால் தத்தளித்தோர் ஆகும்,
நாளும் வருங்கோபாக்கினைக்கு ‘வெருவினோரும்,
நானே பாவியென்றோரும் நடுநடுங்கின பேரும்,-வாரும்
3.பரினோராம் ‘தாசில்வந்தாலும் உதறித்தள்ளார்
பரிதாபம் அன்பிரக்கம் திரு உள்ளத்திலுள்ளார்;
கதித்த மோட்சத்திற் பங்கு கள்ளனுக் கீந்த நல்லார்
கனிந்து வருவோர் தம்மைச் சினந்து நில்லென்று சொல்லார்-வாரும்
வாரும் மனந்திரும்பி வாரும் பாடல் வரிகள், Vaarum Mananthirumbi Vaarum Lyrics