விசுவாசியின் காதில்பட – Visuvaasiyin Kaathil Pada Lyrics

விசுவாசியின் காதில்பட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.
சரணங்கள்
1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. -விசு
2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். – விசு
3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றி விடுக்கம். -விசு
4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்று நிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. -விசு
5. என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. – விசு
விசுவாசியின் காதில்பட பாடல் வரிகள், Visuvaasiyin Kaathil Pada Lyrics