சுவாமி உந்தன் ஆவியை – Swami Unthan Aaviyai song lyrics

சுவாமி உந்தன் ஆவியை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
சுவாமி உந்தன் ஆவியை ஊற்றாயோ? எந்தன்
ஆத்துமத்தை இப்போ தேற்றாயோ?
சரணங்கள்
1. நானென்ற ஆங்காரத்தை நொறுக்காயோ? நல்ல
நீதி மெய் மார்க்கத்தில் நிறுத்தாயோ – சுவாமி
2. லௌகீக ஆசாபாசம் மாற்றாயோ? – கெட்ட
பாவிகளை மீட்க அன்பை ஊற்றாயோ? – சுவாமி
3. என்னை மீட்க உயிரைக் கொடுத்தவா! – அற்ப
நீசன் நான் என்னைப் படைத்தேனே! – சுவாமி
4. தேவே! என்னை ஏற்றுக்கொள்ளாயோ? – உந்தன்
அடிமை மூலமாய் ஆத்மா வெல்லாயோ? – சுவாமி
5. யாக்கோபைப் போல நான் போராட – நீசப்
பாவிகளை உந்தன் பதம் சேர்க்க! – சுவாமி
6. வேதாளத்தின் தலையை உடைத்துவிட – மெய்
வெற்றி பெற்றவனாய் நான் ஆகிவிட! – சுவாமி