தேவனோடு பேச ஜெபமே – Devanodu Pesa Jebamae

தேவனோடு பேச ஜெபமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
தேவனோடு பேச, ஒரே வழி ஜெபமே
அதுவே நம் வாழ்வினை மாற்றும் வழி 2
ஜெபிக்காதவன் , வெறுமையானவன்
ஜெபிக்கின்றவன் , சாதனையாளன் 2
ஜெபமே , ஊக்கமான ஜெபமே
விசுவாசம் பெருகிட உதவிடுமே. 2 ( தேவனோடு பேச )
சரணம்
எசேக்கியா ஜெபித்தார், அற்புதம் பெற்றார்
ஜெயமாக்கும் ஜெபமே, சஞ்சலம் நீக்கும் -2
சோராமல் ஜெபித்து, நம்பிக்கைப் பெறுவோம்
வேண்டிக்கொள்வதெல்லாம் பெற்றுக்கொள்வோம் -2
( ஜெபமே – தேவனோடு பேச )
2.கொர்நேலியு ஜெபித்தார், ஆசீர்வாதம் பெற்றார்
நம்பிக்கையின் ஜெபமோ, தடைகளை உடைக்கும் -2
இடைவிடாமல் ஜெபித்து, சந்தோஷம் அடைவோம்
தேவனுக்குப் பிரியமாய் நடந்திடுவோம் 2
( தேவனோடு பேச)