உம்மையே உறுதியாய் – Ummayae Uruthiyai Patrikondal

உம்மையே உறுதியாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடல்
பல்லவி
உம்மையே உறுதியாய் பற்றிக் கொண்டால்
உம்மையே நம்பும் மனதிருந்தால்
யெகோவா தேவன் நீரே , நித்தம்
சமாதானம் தந்து காத்துக் கொள்வீரே 2
சரணம்
எங்கும் நிறைந்தவர் , ஆளுகைச் செய்வீர்
பாரபட்சமின்றி , நியாயம் செய்வீர். 2
அபூர்வமானக் கிரியைச் செய்திடுவீர்
போதித்து எம்மை உணர்த்திடுவீர். 2- ( உம்மையே )
உருக்கம் உள்ளவர் , பரிந்துப் பேசுவீர்
வெட்கத்துக்குப் பதிலாகப் பலன் தருவீர் 2
எம் ஆக்கினைகளை அகற்றிடுவீர்
தீங்கினை இனிக் காணாதிருப்போம் 2 ( உம்மையே )