எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு – Erikintra Deepamaai Ethirnokku Lyrics

எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பல்லவி:
எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு ஒளிர்கின்றது – இறைவா
எம் பாடல் உமை நோக்கி மகிழ்வாக எழுகின்றது.
அனுபல்லவி:
என்றென்றும் குறையாத உயிரூற்று நீரல்லவா – தலைவா
எம்வாழ்வில் யாமெல்லாம் உம்பாதம் சரணல்லவா!
எல்லோரும் (கோரஸ்):
வரலாற்று நாயகனே, வரும்வாழ்வும் வகுப்பவனே
நிறைவாக உன்பாதம் பணிகின்றோம்
இத்தனை ஆண்டுகளாய் பெற்றஉம் அன்பினையே
நித்தம் எம் வாழ்வாலே பாடிடுவோம்!
– பல்லவி
1.நாடுகள், மொழிகள், மக்கள் இனங்களுக்கே – ஒளியாய்த்
தேடிடும் உம்வாக்கு உடன்பிறப் பாகினாரே.
தன்பலம் இழந்து சிதறுண்ட மாந்தருக்கு
உம்மகன்தான் தங்கும் வீடாகினார்!
(வரலாற்று நாயகனே)
2.எத்தனை பரிவுமக்கு எத்தனை பொறுமை கண்டோம் – இறைவா!
அத்தனை மாந்தரையும் கரையேற்றும் அருள்கண்டோம்.
விண்ணுலகும் மண்ணுலகும் மறுஆக்கம் அடைந்திடுமே – தலைவா
விடுதலை வழங்குகின்ற ஆவியின் பொழிதலினால்
(வரலாற்று நாயகனே)
3.உம்பார்வை பூமியின்மேல் விழுந்தது மீட்பதற்கே – தந்தாய்
எம்கடவுள் எங்கள் காலத்துள்ளே பிறந்தாரே!
உமக்காய் எமக்காய் மனிதனானாரே
உமை அடைந்திட எம் வழியானாரே!
(வரலாற்று நாயகனே)