புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum

புத்திக்கெட்டாத பொருளும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெண்பா
புத்திக்கெட்டாத பொருளும் அறிவுமுள்ள
யுத்தி மிகுந்த நுவலரிய-சுத்திதரு
அய்யனே! மாந்தர்க்களித்த அருள்வேதம்
துய்யவின்ப போதநிறை சொல்.
பல்லவி
அய்யனே! உன்வேதம் இன்பமே -அய்யனே!
அனுபல்லவி
அதனை மறுத்துமீறில் அதிகம் வருகும் துன்பமே; -அய்யனே
சரணங்கள்
1.தேன்கூண்டொழுகு தேனில் மிக்கதே, -சுத்த
தெளிந்த நறுந்தேனில் தக்கதே; உண்ணத்
தித்திப்பதிகம் கொண்ட சுத்த தகைமைவிண்ட -அய்யனே
2.பேதையை அறிவாக்கும் சத்தியம், -ஆவி
பெருக உயிர்ப்பிக்கும் நித்தியம்; -நன்மை ,
பெருக்கங்கொண்ட நீதி உருக்கங்கொண்டசோதி -அய்யனே
3.பொன்னிலும் உயர்ந்த பொன்னாகுமே,-மாள்ளில்
புடமிட்டபசும்பொன்னென்நூலாகுமே -கடை
புகுந்தவழிக்குத் தீபம் தகுந்த அருளிலாபம் -அய்யனே
4.ஆவியின் பட்டயம் ஆகுமே -நித்திய
அருள் மோட்சத்தில் கொண்டுபோகுமே; உன்றன்
அரிய மகிமைகாட்டும், பெரிய கவலை ஓட்டும் -அய்யனே
5.சுத்த நடக்கைதரும் சுத்தமே, -மிக
துய்ய அறிவு தரும் வித்தமே, -இனிமை
சொல்லத் தொலைந்திடாத, வல்லத்தகை அதீத -அய்யனே