அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean lyrics

அதிகாலையிலுமைத் தேடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தே
வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே.
அனுபல்லவி
இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி
சரணங்கள்
1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்
போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி
2.பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது,-தப்
பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட,
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? – அதி
3.நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! – தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!
புகழான நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! – அதி