நான் திரும்பின திசை – Naan Thirumbina Thisai

நான் திரும்பின திசை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆஆஆஆ…
நான் திரும்பின திசை எங்கும் தோல்விகள்
நான் விரும்பின வழி எங்கும் ஏமாற்றங்கள்
வார்த்தைகள் தந்த வேதனைகள்
சூழ்நிலைகள் தந்த சோர்வுகள்
( Chorus)
இயேசுவே.. இயேசுவே.. என் நல்ல தகப்பனே..
மெய்யன்பை அறிந்த பின்னும் வழிமாறினேன்
பொய்யன்பை நாடியே திக்கற்ற பிள்ளையாய்
நெஞ்சம் நொந்து உம் தஞ்சம்வேண்டி
உம் பாதம் முன்னே கெஞ்சி நிற்கிறேன்
1.கண்கள் ஒன்றிலே தூசு பட்டாலே கதிகலங்கி போகும் பாசதகப்பனே
கருவிழிகரைய நான் கதறிநிற்கிறேனே
மனமிரங்க நீங்க மறுப்பதேனப்பா
தேம்பும் எந்தன் உள்ளம்
வாடும் எந்தன் நெஞ்சம் என்று நீரறிந்து மார்போடு அணைத்து கொள்வீர்
வாழ்வில் தனிமை உணர்ந்தேன்
நீரே தஞ்சம் என்றேன்
தோளில் என்றென்றும் என்னை நீர் தூக்கி சுமந்தீர் -இயேசுவே.. இயேசுவே..
2.நிம்மதி இழந்து நான் தவித்து நிற்கிறேனே
அழுது அழுது நான் துடிதுடித்தேனே
மனம்பதறியே நான் பைத்தியமானேன்
உள்ளம் உடைந்து நான் சாவை விரும்பினேன்
எந்தன் பக்கம் வந்தீர் எந்தன் கண்ணீர் துடைத்தீர் எனை அரவணைத்து தோள் தந்து ஆறுதல் தந்தீர்
உந்தன் வார்த்தை தந்து எந்தன் காயம் ஆற்றி உம்மில் என்றென்றும் என்னை நீர் வாழ செய்தீர் -இயேசுவே.. இயேசுவே… ஆஆஆஆ.
“My heart grew weary, my soul withered,
But you embraced me, gave me your shoulder,
And spoke words that healed my wounds.”
When life presses us down, the Word of God whispers.
“He heals the brokenhearted and binds up their wounds.”
Psalm 147:3 (NKJV)
காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum
Special Message | Pr Saju Chathannoor | Second Coming of Jesus | Bible Study| Manna Television
சர்வ வல்லவர் – En Devan Entrum Sarva vallavar
Krupa Mathi | Flevy Issac Johnson | Jasmin Mary | Malayalam Christian Song | ℗ ♪ ©