இயேசுவின் மூலமாய் வரும் – Yesuvin moolamai varum song lyrics

இயேசுவின் மூலமாய் வரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்!
சரணங்கள்
1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம்
ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின்
2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய
ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின்
3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக
தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின்
4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக
பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின்
5. ஆத்தும சந்தோஷமதால் அனவரதமும்
ஆர்ப்பரித்து அட்சயனுக் கர்ச்சனை செய்வீர் – இயேசுவின்
6. சுத்த மறைக்குள் இதனைச் சோதனை செய்து
சத்திய கிறிஸ்து பதம் சார்ந்து சுகிப்பீர் – இயேசுவின்