ஆண்டவர் பங்காகவே – Aandavar Pangakavae

ஆண்டவர் பங்காகவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
ஆண்டவர் பங்காகவே, தசம பாகம்
அன்பர்களே, தாரும் – அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்
அனுபல்லவி
வான்பல கனிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன், பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜா சம்பூரணர் சொல்வதால்
சரணங்கள்
1.வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே – அந்த
மேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திட
விதித்தது தானே
வேதனம் வியாபாரம், காலி, பறவையில்
வேளாண்மை, கைத்தொழில், வேறு வழிகளில்
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே
2.ஆலயங்கட்ட அருச்சனை செய்ய
அதற்குளதைப் பேண – தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண
ஏழைகள் கைம்பெண்கள் அனாதப் பாலர்கள்
ஏதுகரமற்ற ஊனர் பிணயாளர்
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட
3.நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து – நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்புகூர்ந்து
நன்மைபுரிந்த பிதாவைக் கனம்பண்ண
நம்மையும் நம்முடயாவையும் மீந்தாலும்
சும்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் மாவிந்தை யல்லவோ?
ஆண்டவர் பங்காகவே பாடல் வரிகள், Aandavar Pangakavae Lyrics