எழுந்தார் இயேசு ராஜன் – Ezhunthar Yesu Rajan

எழுந்தார் இயேசு ராஜன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

Song
எழுந்தார் ,எழுந்தார் ,இயேசுராஜன்
என்றென்றும் ஜீவிக்கும் தேவ மைந்தன். 2
மரணத்தை ஜெயித்தார் தேவகுமாரன்
மகிழ்ந்து துதிப்போம் அல்லேலூயா. 2
அனு பல்லவி
ஜெயித்தார் , ஜெயித்தார் , அல்லேலூயா
உயிர்த்தார் ,உயிர்த்தார் , அல்லேலூயா. 2
சரணம்
1.மரணமே, உன் கூர் எங்கே?
பாதாளமே , உன் ஜெயம் எங்கே?- 2
வேத வாக்கியங்கள் நிறைவேறவே
மூன்றாம் நாளிலே உயிர்த்தாரே.- 2 ( ஜெயித்தார் )
2.கல்லறை, வெறுமை ஆ்னதே
தூதர்கள் , சாட்சி பகிர்ந்தனரே.-2
தேவ வல்லமையால் பிழைத்தாரே
ஜெயம் கொடுத்தாரே யூத ராஜா-2 ( ஜெயித்தார் )
3.உலகத்தை ஜெயித்தேன் என்றாரே
பலருக்கும் தரிசனம் தந்தாரே.-2
சிங்காசனத்தில் வீற்றிருக்கின்றார்
மீண்டும் வருவார் உறுதியாக-2 ( எழுந்தார் )