நன்மை மூலனே – Nanmai Moolanae

நன்மை மூலனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

சரணங்கள்
1. நன்மை மூலனே – எம் நேய நாதனே,
மைந்தர் பேரில் இந்த வேளை வந்திறங்குமேன்
2. போர் அதிகமாய் – சுவாமி மும்முரிக்குதே
சோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும்
3. ஆத்துமா மிக – சுவாமி தத்தளிக்குதே
காத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிட வாரும்
4. துன்பம் வந்தாலோ – சுவாமி துயர மின்றியே
இன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமேன்
5. இருளாய்த் தோன்றுதே – சுவாமி அருளைத் தாருமேன்
பரத்தின் ஜோதி எமக்குள் வீசக் கிருபை கூருமேன்
6. எந்தன் நம்பிக்கை – சுவாமி உம்மில்தான் ஐயா
நம்பி என்னை முற்றுமாகத் தத்தஞ் செய்கிறேன்
நன்மை மூலனே பாடல் வரிகள், Nanmai Moolanae Lyrics