மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின் – Magiluvean Magiluvean Ratchippin song lyrics

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன்
சரணங்கள்
1. அத்தி மரம் துளிர் விடாமற் போயினும்
திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும் – மகிழுவேன்
2. ஒலிவ மரம் காய்க்காமற் போயினும்
வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் – மகிழுவேன்
3. கிடையில் ஆடு முதலற்றாலும்
தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் – மகிழுவேன்
4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் – மகிழுவேன்
5. என் கோட்டை என் பெலன் என் யெகோவா
உமக்குள் நித்தியம் மகிழுவேன் – மகிழுவேன்