நித்திய மோட்சானந்த – Niththiya Motchaanantha song lyrics

நித்திய மோட்சானந்த
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

சரணங்கள்
1. நித்திய மோட்சானந்த – மகிமை
நினைத்தால் முடியாது – ஆனால்
மெத்தச் சுருக்கமதாய் – வேதத்தோ
டொத்துப் பார்த்தால் தெரியும்
2. மங்கள நகரத்திற்கு – மதில் வச்சிரக்
கல்லாலே போட்டிருக்கும் – மிகு
தங்கத்தைப் போல் பளிங்காய்த் துலங்கிடும்
சாயுச்சியப் பட்டணமே
3. சூரிய சந்திரனின் ஒளியங்கு
தோன்றிடக் கூடாது – இயேசு
நீதியின் சூரியனாய்ப் பிரகாசிப்பார்
நிச்சயம் நிச்சயமே
4. துன்பத்தின் பாதை சென்ற – பரிசுத்த
சுவாமியின் மக்களெல்லாம் – பே
ரின்பத்தால் சூழப்பட்டு இராக்காலம்
இல்லாமல் வாழ்ந்திடுவார்
5. கண்ணீரும் அறியார்கள் – மனக்
கவலையுமறியார்கள் – ஜீவ
தண்ணீரால் தாகம் நீங்கி, சதா காலம்
சந்தோஷம் கொண்டாடுவார்
6. நோய் பிணி யணுகாது – கெட்ட
பேய்களுமணுகாது – அங்கே
ஓசன்னாப் பாட்டுடனே தெய்வத்தை
ஓயாமல் போற்றிடுவார்
7. ஆசனம் இயேசுவுடன் – ஜெயம் பெற்ற
அன்பர்க்குப் போட்டிருக்கும் – அங்கே
ஓசன்னாப் பாட்டுடனே தெய்வத்தை
ஓயாமல் போற்றிடுவார்
8. பாவமில்லா உலகம் – இந்தப் புவி
பாவஞ்செய்யும் உலகம் – அங்கே
சாபமில்லா மகிமை இந்தப் புவி
சாபத்தால் கெட்டதுவே
9. பாடு வருத்தமில்லை – இங்கே பல
பாடுங் கொடுமையுமே – அங்கே
வாடும் மனுஷரில்லை இங்கே யெல்லாம்
வாடிப்போகும் பொருளே