தேவனே உமையான் – Devanae Umaiyaan Lyrics

தேவனே உமையான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணிகள்
1.தேவனே உமையான் மனமாறிப் பிறந்த ஓர் சிறிய குழந்தையாகச்
சேர்ந்தேன் எனக்காய் நீரே எல்லாமும் செய்கிறீர் தயவாக.
2.ஆவியில் வளர ஞானப் பாலூட்டி ஆதரிப்பதை மறக்கேன்;
அனுதினம் நீதி ஆடையளிக்கும் அருமையும் நான் மறக்கேன்.
3.தாய் மகவணைத்துக் காப்பதொப்பாகவே ‘தமியனைக் காக்கின்றீர்
தவறிவிழாமல் கைதந்து தாங்கி தயை மடி சேர்க்கின்றீர்.