aa intha nantru yaanariyaatha

ஆ இந்த நன்று யானறியாத தொன்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆ இந்த நன்று யானறியாத தொன்று
1. கோவிந்தர்கள் போற்ற மாட்டுக்
கொட்டிலுக்குள்ளே சிறந்து
மாவிந்தைய தாய்ப் பரனின்
மைந்தன் மனுவான செயல்
2. சிந்தை மிகத் தேற நிர்ப்பந்த
மெல்லாம் மாற
சொந்தமாகக் கூறத்
துயராறக் கரை யேறச் செய்த
3. பத்தமில்லா பாதகனைச்
சித்தமுடனே இது நாள்
வைத் தளித்த மாதயவை
எத்தனைய தென்று சொல்வேன்
4. அன்னையிடத் தென்னை
யமைத்தன்று முதல் நீ செய் தயைக்
கென்ன பலம் என்ன நலம்
என்ன உமக்கீடு சுவாமி
5. அநேக நேகமாக
அற்புத மிஞ்சுவி வேகச்
சிநேகம் வைத்த
கரிசித்த பராமரித்த
6. வேதநாயகன் பாட
விண்ணவர் வானின்றாட
ஆதி செய்வினை யோட
அருள் நீடக் கைகூடச் செய்த