Aaltha Setrinil Agapatta Nammai Anaithu

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை
அணைத்து எடுத்தாரே -2
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே
இயேசு ஆறுதல் அளிப்பாரே-2
1.பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைப்பாரே-2
இயேசு கோபத்தை கலைப்பாரே
2.காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும்
ஆகமம் ஆனாரே-2
இயேசு ஆகமம் ஆனாரே
3.கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே -2
இயேசு கட்டுகள் அறுத்தாரே
4.கல்வாரிப் பாதையில் பார சிலுவையை
நொந்து சுமந்தாரே-2
இயேசு நமக்கெனப் பிறந்தாரே
5.பூவினில் வந்த தேவனை துதித்தால்
தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தை ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே
நல்ல பாசம் வளர்ந்திடுமே