Aananthamae! Jeyaa! Jeyaa!

ஆனந்தமே ஜெயா ஜெயா
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்
1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்
2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ்
3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் – புகழ்