aanmavin unave aanantha niraive -2

ஆன்மாவின் உணவே ஆனந்த
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆன்மாவின் உணவே ஆனந்த நிறைவே -2
விருந்தாக வரும் தேவனே – இயேசுவே
எழுந்தென்னை ஆட்கொள்ளுமே -2
வானின்று வந்த உயிருள்ள உணவே
வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் ஒளியே
தானென்றப் போக்கில் தடுமாறும் நெஞ்சின்
தாகங்கள் தீர்க்கும் உயிரூற்றே வா -2
கருணை உருவாய்உனைக்காணும் போது
கண்கள் திறந்து பார்வை அடைவேன்
அன்றாட உந்தன் அன்பை பயில்வேன்
கொண்டாடி அதனை பறைசாற்றுவேன் -2
எமைக் கூட்டி சேர்க்க தனைப்பிட்டு தந்த
சமபந்தியாகும் கருணாகரா உயர்வான அரசின்
சுவையான விருந்தே உறவாக்கி எம்மை அரசாலவா -2