aantavar evvalavu nallavar enru suvaiththu parungkal -2

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள் -2
ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன் அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என் ஆன்மா ஆண்டவரில் பெருமை கொள்ளும் சிறுமையுற்றோர் இதைகேட்டு அக்களிப்பார்களாக
அவரை நோக்குங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் வெட்கத்தால் தலைகுனியமாட்டீர்கள் இதோ திக்கற்றவன் கூவி அழைக்க ஆண்டவர் அவன் குரலை கேட்டார் எல்லாவித நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார்
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினி கிடக்கும்
ஆண்டவரை தேடுவோர்க்கோ எதுவும் குறைவுபடாது
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள்
அவரிடம் தஞ்சம் புகுவோர் பேறுபெற்றவர்
உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலே உள்ளார் ஆண்டவர்
மனம் நலிந்தவர்களை காக்கின்றார் ஆண்டவரது கண்கள் நீதிமான்களை
நோக்குகின்றன தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கின்றார்