"aantavare pesum um atiyan ketkiren nee veettirkul vara nan thakuthi arravan aanal oru varththai mattum sollum "

ஏசுவேஎன்னிடம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

"ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன் நீ வீட்டிற்குள் வர நான் தகுதி அற்றவன் ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் "
ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்
தேடிடும் ஆயனே தேற்றுவாயா தாகத்தில் நான் வாடினேன் ...
பேசுகின்ற தெய்வமானால் பேசுமே ஏசுவே நான் வாழுவேன் ...
ஆசையோடு காத்திருந்தேன் பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன் ....
ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்.....
நீ பேசினாய் ஒளி வந்தது,நீ பேசினாய் புயல் நின்றது,
நீ பேசினாய் பயம் போனது,நீ பேசினாய் சுகமானது ,
நீ பேசினால் என் நெஞ்சிலே கனமான சுமை கூட காற்றாகுமே,
நீ பேசினால் என் கண்ணிலே வடிகின்ற நீர் கூட சுகமாக்குமே...
பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன்...
(ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்.....
தேடிடும் ஆயனே தேற்றுவாயா தாகத்தில் நான் வாடினேன் ...)
நீ பேசினாய் உயிர் வந்தது,நீ பேசினாய் பசி நின்றது,
நீ பேசினாய் மனம் திறந்தது,நீ பேசினாய் பிணி தீர்ந்தது,
நீ பேசினால் என் வாழ்விலே குறைவான எல்லாமே நிறைவாகுமே
நீ பேசினால் என் தெய்வமே அழியாமல் என் வாழ்வு நிலையாகுமே....
பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன்...
ஏசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன்
தேடிடும் ஆயனே தேற்றுவாயா தாகத்தில் நான் வாடினேன் ...
பேசுகின்ற தெய்வமானால் பேசுமே ஏசுவே நான் வாழுவேன் ...
ஆசையோடு காத்திருந்தேன் பேசுமே ஏசுவே நான் கேட்கின்றேன் ....