aantavarin vazhithanaiye aayaththam seyyungkal

ஆண்டவரின் வழிதனையே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆண்டவரின் வழிதனையே ஆயத்தம் செய்யுங்கள்
பாழ்வெளியில் அவர் பாதைகளை செம்மைப்படுத்துங்கள்
கோணலானவை நேராகவும் பள்ளத்தாக்குகள் சீராகவும்
ஆண்டவரின் மகிமையினை எல்லாரும் காண்பார்கள்
1. பூ உதிருமே புல் உலருமே
ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் வாழுமே
வான்மழையென அவர் அருள் இனி புவி வருமே
ஏழையர் எளியவர் விடுதலை என எழுமே
என் தேவனே உன் ஆலயம் கண்கள் காண்கின்ற பேறு பெறும்
2. நம் வாழ்விலே நன்மைகள் சேருமே
நலிவென நாம் கண்டவை வலிமையில் வளருமே
அகமதில் அருளொளி அகலென வளர்ந்திடுமே
இகமதில் இருள் பகை இனி இல்லை என வருமே