Aaradhanai Seigirom

ஆராதனை செய்கிறோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை செய்கிறோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்
நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்
ஆராதனை -4 உமக்கு ஆராதனை
நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்
உன்னதமானவரே
உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
என்னை காப்பவரே
என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே
கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்பவரே
கர்த்தராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே
துதிகளின் தேவனே
உம்மை துதிக்கின்றோம்
தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிபோமே