Aasaiyaakinen Kovae

ஆசையாகினேன் கோவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
ஆசையாகினேன், கோவே-உமக்
கனந்த ஸ்தோத்திரம், தேவே!
அனுபல்லவி
இயேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! -ஆசை
1.வேதா, ஞானப் பர்த்தா,-என்-தாதா, நீயே கர்த்தா;
மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. – ஆசை
2.கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,
நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. – ஆசை
3.வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்
காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. – ஆசை
4.வந்தனம், வந்தனம், யோவா!-நீ-சந்ததம் சந்ததம் கா, வா,
விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா, இயேசு நாதா! – ஆசை
ஆசையாகினேன் கோவே பாடல் வரிகள், Aasaiyaakinean Kovae lyrics