aasaiyay thotarukiren

ஆசையாய் தொடருகிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆசையாய் தொடருகிறேன்
என் இயேசுவே உம்மை தானே
ஆசையாய் தொடருகிறேன்
என் காதலன் இயேசுவையே (2)
ஜீவனுள்ள என் தேவன் நீரே
கண்மணி போல் காத்திடுமே
பாசமுள்ள என் தேவன் நீரே
கண்மணி போல் காத்திடுமே (ஆசையாய் )
ஜீவனுள்ள என் தேவனுக்கு
மாளிகையாய் நான் எழும்பணுமே (2)
பாவமில்லா வாழ்வு வாழ்ந்து
நித்தியத்தில் சேரணுமே (2)
சாட்சியுள்ள வாழ்வு வாழ
ஆசையாய் இருக்கின்றேன் (2)
என் மூச்சிருக்கும் வரை உம் புகழ் பாடி
உம் மார்பினில் நான் சாய்ந்திடுவேன் (2)
வாழ்வதற்கு வாழ்க்கை உண்டு
கிறிஸ்துவில் நீ வாழணுமே (2)
இது தான் வாழ்க்கை இது தான் முடிவு
இது தான் வாழ்வின் நிச்சயமே (2)
ஆசையாய் தொடருகின்றேன்- (2)
ஜீவனுள்ள என் தேவன் நீரே
கண்மணி போல் காத்திடுமே
பாசமுள்ள என் தேவன் நீரே
கண்மணி போல் காத்திடுமே