aathiyil iruntha varththaiye

ஆதியில் இருந்த வார்த்தையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆதியில் இருந்த வார்த்தையே
மகிமை மகத்துவம்
துதியும் ஸ்தோத்திரமும்
உன்னதத்தில் இருக்கிற
தேவாதி தேவனுக்கே-2
சமாதானம் இணக்கமும்
பூமியில் உண்டாயிற்தே
பிரியமும் தயவும்
மானிடர் பேரில் இருக்குமே
ஆதியில் இருந்த வார்த்தையே
தேவனாகவே இருந்தாரே
மானிட ரூபம் எடுத்ததுமே
பாலனாய் மண்ணில் பிறந்தாரே
துாதர் சேனை திரள் வாழ்த்திடவே
உலகிற்கோர் நற்செய்தி உரைத்தனரே -2
இரட்சிக்க கிறிஸ்து பிறந்துள்ளார்
பாவம் பிணியில் இருந்துமே -2 – ஆதியில்
வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
ஜொலிக்க செய்திடும் ஜோதி அவர்-2
விசுவாசித்தவரை எற்றுக்கொண்டால்
தேவனின் சுதராய் மாறிடுவாய் -2 – ஆதியில்
உன் பாவம் சிலுவையில் சுமந்திட்ட
நேசரை அன்போடு பற்றிக்கொள்வாய் -2
உலகிற்கு திரும்ப வந்திடுவார்
எவரையும் நியாயம் தீர்த்தீடுவார் -2 – ஆதியில்