aatu ratham kozhi iratham

ஆட்டு இரத்தம் கோழி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை
மனுஷ இரத்தம் மிருக இரத்தம் விடுதலையில்லை
விடுதலை தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க
இரத்தமோ இரத்தம் இயேசு இரத்தமுங்க – நமக்கு
ஜெயம் தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க
நமக்காக சிலுவையிலே சிந்தின இரத்தமுங்க
பாவ சாபம் நீக்கி நம்மை சுத்திகரிக்குமுங்க
ஜீவ இரத்தமுங்க அது இயேசு இரத்தமுங்க
நம்மை பரிசுத்தமாய் வாழ வைக்கும்
மீட்பின் இரத்தமுங்க
உலர்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் தருமுங்க
தளர்ந்துபோன கைகளை திடப்படுத்துமுங்க
வழிஞ்ச இரத்தமுங்க சிலுவையில்
பிழிஞ்ச இரத்தமுங்க
அழிந்து போகும் ஆத்துமாவை
மீட்கும் இரத்தமுங்க
எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்ட இரத்தமுங்க
வீணாய் தவிப்போரை தம்மண்டை
சேர்க்கும் இரத்தமுங்க
மகிமை இரத்தமுங்க மறுரூப இரத்தமுங்க – எனை
மார்போடு அணைத்துக்கொள்ளும்
இயேசு இரத்தமுங்க