aaviyai oorrumaiya

ஆவியை ஊற்றுமய்யா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியை ஊற்றுமையா
பாவி நான் கலங்குகின்றேன்
தாவி வந்தேன் உம்மிடமே
என் தாகத்தை தீருமைய்யா-ஐயா
(1) பாடித்திரிந்தேன் பறவையைப் போல்
என் பசி தீரவில்லை -2
ஓடி அலைந்தேன் பூமியின் மேல் -2
ஒன்றும் நான் காணவில்லை
அறையுண்ட சிலுவையில் அருகில் வந்தேன் -2
அனைத்தே ஆற்றுமயா
ஆவியை ஊற்றுமையா
(2)கசந்த மனம் தான் என் கோவில்
கண்ணீர் அதிலே என் பாடல் என் பாடல் -2
கவலை என்பது என் உறவு-2
கலக்கம் அதிலே பெரும் நிறைவு
அரையுண்ட சிலுவையில் அருகில்வந்தேன் .
அனைத்தே ஆற்றுமையா
ஆவியை ஊற்றுமையா
(3)எந்தன் உள்ளம் உமதில்லையோ
உந்தன் அன்பு எனக்கில்லையோ -2
பந்தம் பறந்திடும் புகையல்லவா-2
சொந்தம் என்றும் நீர் அல்லவா
அறையுண்ட சிலுவையின் அருகில் வந்தேன் -2
அனைத்தே ஆற்றுமையா
ஆவியை ஊற்றுமையா