Aaviyanavar En Naduvil

ஆவியானவர் என் நடுவில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியானவர் என் நடுவில் இருக்கிறார்
ஒன்றுக்கும் பயமே இல்லை
ஆவியானவர் என் துணையாய் இருப்பதால்
எதற்கும் கவலையே இல்லை
கர்த்தரே ஆவியானவர்
அவராலே எனக்கு விடுதலை உண்டு-2
அவராலே விடுதலை உண்டு-2
1.ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியானவர்
ஆலோசனை பெலனையும்
அருளும் ஆவியானவர்-2
கர்த்தருக்கு பயப்படும்
பயத்தை அருளும் ஆவியே
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்
2.பாவத்தையும் நீதியையும்
உணர்த்தும் ஆவியானவர்
ஞாயத்தையும் உலகத்தையும்
உணர்த்தும் ஆவியானவர்-2
சகல சத்தியத்தில்
என்னை நடத்தும் ஆவியே-2
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்