aaviyilum unmaiyilum vazha – Aaviyilum Unmaiyilum Vaala

ஆவியிலும் உண்மையிலும் வாழ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆவியிலும் உண்மையிலும் வாழ – Aaviyilum Unmaiyilum Vaala
ஆவியிலும் உண்மையிலும்
வாழ அழைக்குது
ஆயன் இயேசு தன்னைத் தந்த
அன்பின் பலியிது – 2
உயிரில் கலந்த பலியிது
உறவை வளர்க்கும் பலியிது
நெஞ்சில் நிகழும் பலியிது
என்றும் அழியா பலியிது – 2
ஆ…ஆ….ஆ
1. இறைகுலமாய் இணைந்திட
தவழ்ந்திடும் இறைப்பிரசன்னம்
ஒருடலாய் நம்மை மாற அழைக்குது
வாழ்க்கைப்பலி உடைந்திட
எழுந்திடும் இறைப்பிரசன்னம்
நேர்வழியில் நம்மை வாழ அழைக்குது
வெள்ளமென இறையருள்
உள்ளமெல்லாம் நிறையுது – 2
வேற்றுமைகள் ஓடி மறையுது
2. உள்ளம் சொல்லும் வேண்டலில்
பொங்கிடும் இறைப்பிரசன்னம்
அன்பு செய்ய நம்மை நாளும் அழைக்குது
நற்கருணை உணவினில் தங்கிடும்
இறைப்பிரசன்னம்
அர்ப்பணிக்க நம்மை வாழ்வில் அழைக்குது
வாழ்வின் அர்த்தம் பலியினில்
ஆழ்மனதில் பதியுது
பார்வை எங்கும் பாதை தெரியுது
Tamil Mass RC christian song with lyrics ஆவியிலும் உண்மையிலும் வாழ Avielum UnmaiElum வருகைப்பாடல்