aayan than manthaiyai kappathupoola

ஆயன் தன் மந்தையை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆயன் தன் மந்தையை காப்பதுபோல
ஆண்டவர் நம்மை காக்கின்றார் -2
குறைகள் எனக்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை -2
தாங்கும் தேவன் இருப்பதால்
1. அமைதியான இடத்தில் என்னை இளைப்பாற செய்கிறார்
புத்துயிர் அளிக்கும் ஆவியாலே நீதிவழியில் நடத்துவார் -2
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால் எதற்கும் அஞ்சிடேன்
அவரின் கோலே தேற்றும் துணையாகும்
குறைகள் எனக்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை-2
தாங்கும் தேவன் இருப்பதால்
-ஆயன் தன் மந்தையைக்
2. எதிர்த்து நிற்போர் அனைவர் கண்முன் என்னை உயர்த்துகிறார்
தலையில் நறுமண தைலம் பூசி அருளால் நிரப்புகிறார் -2
வாழ்நாள் எல்லாம் அருளும் நலமும் உமது பேரன்பும்
சூழ்ந்து நின்று காக்கும் அரணாய் என்னை தொடர்ந்து வரும்
உமது இல்லம் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்
குறைகள் எனக்கோ இனியில்லை
கவலை எதுவும் பெரிதில்லை-2
தாங்கும் தேவன் இருப்பதால்
-ஆயன் தன் மந்தையைக்