aayiram navukal poothathaiya

ஆயிரம் நாவுகள் போததையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆயிரம் நாவுகள் போததையா
நீர் செய்த நன்மைகள் விவரிக்க
ஆயிரம் நாட்கள் போததையா
உன் நன்மைகளை சொல்லித் துதிக்க( 2 )
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டே இருப்பேன் ( 2 )
1. என் இருதயத்தின் வேண்டுதலை
உம் செவிகள் கவனித்ததே
கண்ணீரோடு நான் ஜெபித்ததெல்லாம்
உம் கண்கள் கண்டிட்டதே ( 2 )
எனக்கு நேரிட்ட எல்லா நிந்தைகள் நீக்கி
அதிசயமாய் என்னை நடத்தினீரே
நான் நினைத்ததிலும் நான் ஜெபித்ததிலும்
அதிகமாய் எனக்கு செய்தவரே ( 2 )
2. உமது கரம் என்னோடிருந்து
தீங்குக்கு விலக்கினதே
என் எல்லைகளை விஸ்தாரமாக்கி
பெருக செய்திட்டதே (2)
தூஷித்தோர் முன்பாக தூற்றினோர் முன்பாக
வல கரம் நீட்டி தூக்கி நீரே
என் விழுகையை எதிர் நோக்கிக் காத்திருந்தோர் முன்பு
உயர்த்தி என்னை வைத்திரே ( 2 )
3. என் கால் இடறி நான் விழும்படிக்கு
எதிரியால் தள்ளப்பட்டேன்
கர்த்தரோ என் ஆதரவாய்
என் பக்கம் இருந்தீரே ( 2 )
ஒரு வழியாய் எதிரிட்டு வந்தோரை
ஏழு வழியாய் துரத்தினீரே
விழுங்கும்படி எத்தனிதோரின்
கைக்கு என்னை இரட்சிதீரே ( 2 )