aayiram navukal poothathaiya

ஆயிரம் நாவுகள் போதாதையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆயிரம் நாவுகள் போதாதையா
ஆண்டவரே நன்றி சொல்ல
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
ஒவ்வொன்றாய் நான் சொல்ல தான் கூடுமோ
மலை போன்ற துன்பம் என்னை சூழ்ந்த போதும்
பனி போல உருக வழி செய்தீரே
இருளான பாதை தடுமாறும் போதும்
ஒளியாக நீர் வந்து எனை மீட்டீரே
அலைமோதும் வாழ்வினில் துணையாகவே
அருகினில் வந்து என்னைக் காத்தீரே
தனியாக நானும் அலைந்திடும் போதும்
அரணான துணையாக நீர் வந்தீரே
தகப்பனும் தாயும் கைவிட்ட போதும்
கர்த்தாவே என்னோடு இருந்தவர் நீரே
உம்மை போல் வேறொரு தெய்வமில்லை
நீர் போதும் என்றும் நீர் போதுமே