aayuthathaari naan

ஆயுததாரி நான் அபாத்திரனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.ஆயுததாரி நான், அபாத்திரனே,
சேனாபதிக்கோ பின் செல்வேனே.
நில், செல் என்றவர் சொல்லக் கேட்கவும்,
யேசுவின் நல்வாக்கை நம்பி வெல்லவும்.
பல்லவி
போர் ஓலி கேட்குதே! வெற்றி உண்டாம்!
போராடுவோம் முனை யாவிலும்.
சேனாதிபதி என்னை நோக்குவார்;
ஆயுததாரியையும் நம்புவார்.
2.ஆயுததாரி நான் இந்நேரத்தினில்
ஆயத்தமாய் படை முகத்தில்,
போர்க்களத் தாரவாரங் கேட்கவே
பயமில்லாமல் யுத்தஞ்செய்வேனே.
3.ஆயுததாரி நான், பலவீனனாய்க்
காணப்பட்டாலும், வெற்றி வேந்தரால்
நித்திய காலம் மிக வாழுவேன்,
முக்தி மோட்ச வீட்டில் நிலைத்திருப்பேன்.
ஆயுததாரி நான் அபாத்திரனே பாடல் வரிகள், Aayuthathaari Naan Abathiranae Lyrics