achuruthum vanaanthiramo

அச்சுறுத்தும் வனாந்திரமோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே
கலங்காதே கர்த்தர் உன் துணையே
உன் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ
உன் சந்திரன் ஒளி கொடுக்க மறுத்ததோ
நட்சத்திரம் கண்ணில் படவில்லையோ
கலங்காதே கர்த்தர் உன் துணையே
காரிருள் உன்னை மூடிக் கொண்டதோ
அழுகையின் பள்ளம் உருவக்கடப்பாயோ
மரண இருளின் பள்ளத்தில் நடப்பாயோ
கலங்காதே கர்த்தர் உன் துணையே
உன் மாமிசம் உருவழிந்து விட்டதோ
உன் எலும்புகள் உருக்குலைந்து போனதோ
நரம்புகள் தளர்ந்து தான் போனதோ
கலங்காதே கர்த்தர் உன் துணையே