adimai alla eni thanimai alla

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
தேவன் உன்னோடு இருக்கிறார் – 2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
1. தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2
நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார் – 2
2. தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை – 2
தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர் – 2
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2
3. பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் – 2
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் – 2
ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார் – 2