Aiyya Umathu siththam

ஐயா உமது சித்தம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்,
அனுபல்லவி
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா
சரணங்கள்
1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழி யொப்பி
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா
2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா
3. வசை, இசை,பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா
4. என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன். – ஐயா
5. குயவன் கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! – ஐயா