akkiniyin apishekam

அக்கினியின் அபிஷேகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அக்கினியின் அபிஷேகம்
சகல ஜனத்தின் மேலும்
அறுவடை காலமல்லோ
உம் ஆவியால் நிரப்பனுமே
தீ போல இறங்கனுமே
உந்தன் ஆவியால் நிரப்பனுமே
கொடுங்காற்றாய் வீசனுமே
பெருமழையாய் பொழியனுமே
1. உலர்ந்த எலும்புகளில்
ஒரு சேனையை நான் பார்க்கிறேன்
அதிகாரம் தரவேண்டுமே
உம் ஆவியில் உரைத்திடவே
2. கர்மேல் என்னும் ஜெபமலையில்
ஒரு கைமேகம் நான் பார்க்கிறேன்
ஆகாபும் பயந்த போலே
பெரும் மழையாய் பொழியனுமே
3. சீனாய் என்னும் மலையில்
ஒரு தீ ஜுவாலை நான் பார்க்கிறேன்
இஸ்ரவேலின் தெய்வமே
அந்த தீ என்மேல் இறங்கனுமே