akkiniyin karrai veesas – Akkiniyin Kattrai Veesa seiyumae

அக்கினியின் காற்றை வீசச்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அக்கினியின் காற்றை வீசச் – Akkiniyin Kattrai Veesa seiyumae
அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே
பின்மாரியின் மழையை பொழியச் செய்யுமே
1.மூப்பர்கள் சொப்பனத்தை காணச் செய்யுமே
வாலிபர்கள் தரிசனத்தை நோக்கச் செய்யுமே
எங்கள் குமாரரை எழும்பச் செய்யுமே – 2
தீர்க்க தரிசனங்களை சொல்லச் செய்யுமே – 2
2.ஆவியின் வல்லமையை ஊற்றச் செய்யுமே
ஆவியின் கனிகளால் நிறையச் செய்யுமே
காட்டுப் புறாக்கள் சப்தம் கேட்கச் செய்யுமே-2
தேசம் எங்கும் எழுப்புதல் காணச் செய்யுமே-2
இந்தியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவும்
கர்த்தாதி கர்த்தரைப் போற்றிப் பாடவும்
கல்வாரி இரத்தத்தால் மீட்கப் படவும்-2
இந்தவேளை இப்போதே சந்தித்தருளும்-2