alai alaiyana apishekam en mele oorrumaiyya -2 akkiniyaka marita anal kontu umakkaka ezhumpita – alai alai

அலை அலையான அபிஷேகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அலை அலையான அபிஷேகம் என் மேலே ஊற்றுமைய்யா -2 அக்கினியாக மாறிட அனல் கொண்டு உமக்காக எழும்பிட – அலை அலை
1.எலியாவை போல நான் ஜெபிக்கனுமே வானத்திலிருந்து அக்கினி இறங்கனுமே – 2 இறங்கட்டும் இறங்கட்டும் இறங்கட்டும் அக்கினி மழையாய் இறங்கட்டும் இறங்கட்டும் இறங்கட்டும் இறங்கட்டும் அபிஷேக மழையாய் இறங்கட்டும் -2 அலை அலை
2. ஏசாயா நாவை நீர் தொட்டது போல எங்கள் நாவை உம் கரம் தொடனுமே – 2 திறப்பின் வாசலில் நிற்கணும் அழியும் மனிதரை மீட்கணும் – 2 அலை அலை
3. அக்கினி மயமான நாவுகள் போல சபையின் நடுவே வந்து அமரனுமே-2 ஆவியில் நிறைந்து துதிக்கணும் அந்நிய பாஷையில் ஜெபிக்கனும் ஆவியில் நிறைந்து பாடனும் – துதிக்கனும் அந்நிய பாஷையில் பேசனும் – 2 அலை அலை
அலை அலையான அபிஷேகம் பாடல் வரிகள், Alai Alaiyaana Abishegam lyrics