alaichalgalai arindhavarae

நான் பயப்படும் நாட்களில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன்-2
என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே-2
என் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம்
கணக்கில் வைத்தவரே-2-நான் பயப்படும்
1.என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர்-2
சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்-2 – என் அலைச்சல்களை
2.எனக்காக யாவையும் செயத்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை-2
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை-2 – என் அலைச்சல்களை