alaikalatum katalil

அலைகளாடும் கடலில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அலைகளாடும் கடலில்
கரையை தேடினேன்
படகு சேரும் துறையில்
வெளிச்சம் தேடினேன்
உடைந்து போன இதயம்
ஒன்று சேருமோ
தொலைந்து போன கனவும்
நிஜமாய் மாறுமோ
அன்பே அன்பே அன்பே
நீயும் கலங்காதே
உந்தன் நேசர் என்றும் உண்டு
மறவாதே
1.இதயம் எல்லாமே
நெருப்பாகுதே
நினைவுகள் வந்தாலே
நெஞ்சம் வலிக்குதே
உன்னை காணாமல்
உன்னை நினைக்காமல்
என் உள்ளம் எரிமலையாய்
வெடிக்கின்றதே
– அலைகளாடும்
2.மனம் தான் மாறிடுமோ
என காத்து நின்றேன்
மறுபடி வருவாயா
எதிர் பார்த்து நின்றேன்
நான் வாழ்வேனோ
இல்லை மரிப்பேனோ
என் உள்ளம் எனக்குள்
யுத்தம் செய்கின்றதே
– அலைகளாடும்
3.மறையும் அன்பிற்காய்
ஏங்குகின்றாய்
சிலுவையின் அன்பைதான்
மறக்கின்றாய்
கல்வாரி பார்
காயங்கள் பார்
என் ஜீவனை கூட
உனக்காய் கொடுத்துவிட்டேன்
அலைகளாடும் கடலில்
கரையை காட்டுவேன்
படகு சேரும் துறையில்
வெளிச்சம் காட்டுவேன்
உடைந்து போன இதயம்
புதிதாய் மாறுமே
அன்பே அன்பே அன்பே
நீயும் கலங்காதே
உந்தன் நேசர் என்றும்
உண்டு மறவாதே