alaiyolir arunanai – Alaiyolir Arunanai Aninthiduma

அலையொளிர் அருணனை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அலையொளிர் அருணனை – Alaiyolir Arunanai Aninthiduma
பாடல் வரிகள் – மாதா பாடல்
அலையொளிர் அருணனை அணிந்திடுமா
மணி முடி மாமரி நீ – 2
வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி – 2
கலையெல்லாம் சேர்ந்தெழும் தலைவியும் நீயல்லோ
காலமும் காத்தருள்வாய் – 2
1. அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே – 2
பொல்லாத கூளியின் தொல்லைகள் நீங்கிட
வல்ல உம் மகனிடம் கேள் – 2
2. அகோரப் போர் முழங்கி அல்லலும் தோன்றுதன்றோ – 2
எல்லோரும் விரும்பிடும் நல்லதோர்
அமைதியை சொல்லாமல் அளித்திடுவாய் – 2