Alinthu Pokinta Aaththumaakkalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தேடி செல்வது என் கடமை
அன்பு நேசரை அவனி எங்கிலும்
சுமந்து செல்வது என் பெருமை
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத
உம் அன்பை பாடி மகிழ்வேன்
என் நேசர் இயேசுவை தேடி வந்த
உம் அன்பை எங்கும் சொல்லுவேன் -அழிந்து
அழகாக என்னை வனையும்
நீர் விரும்பும் பாத்திரமாக
அன்பாலே என்னை நிரப்பும்
என்றும் உமக்காய் பயனுள்ளதாக -2
அப்பா நன் உந்தன் சித்தம் செய்யவே
இப்பாரில் எங்கும் ஒழி வீசவே
தந்தேன் என்னை ஏற்று கொள்ளும் ஏசுவே -நேற்றும்
நீர் தந்த வாழ்க்கை
அதை உமக்காக வாழ வேண்டும்
நீர் தந்த காலம் நேரம்
அதை உமக்காக தந்திடவேண்டும் -2
ராஜா நன் உந்தன் சித்தம் செய்யவே
ரட்சிப்பின் செய்தி கொண்டு சொல்லவே
தந்தேன் என்னை ஏற்று கொள்ளும் ஏசுவே – நேற்றும்