Allelujah Sthothiram

அல்லேலூயா ஸ்தோத்திரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
துதிகளிலே பாத்திரர் – இயேசு
நாதர் புகழையே போற்றிப்பாடிடு
பாடிடு பாடிடு இயேசு ராஜன்
புகழ்பாடிடு அல்லேலூயா-2
1.தாழ்வில் நம்மை நினைத்தார்
வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்
கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்-2
காலமெல்லாம் அவர் புகழைப்
போற்றிப் பாடிடு – அல்லேலூயா
2.தூதர்கள் போற்றும் தேவன்
துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்
மாந்தர்கள் உள்ளத்தில்
வேந்தனாய் வாழ்த்திடும்
மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு – அல்லேலூயா
3.சேதமின்றி காத்தார்
தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்
அன்பின் தேவனை ஆத்தும நேசரே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு – அல்லேலூயா