Alleluya Kartharin Oozhiyarae song lyrics

அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே
துதியுங்கள் கர்த்தரின் ஜனங்களே
இன்று முதல் என்றென்றைக்கும்
துதித்திடுவோம்
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி
அது அஸ்தமிக்கும் திசை வரைக்கும்
கர்த்தர் நாமம் எந்நாளும் உயர்த்தப்படும்
1.கர்த்தர் எல்லா ஜாதிகளின் மேல்
உயர்ந்தவர்- அவரின் மகிமை
வானங்களின் மேல் உயர்ந்தது -2
சிறியவனை அவர் புழுதியிலிருந்து
தூக்குகிறார் – எளியவனை அவர்
குப்பையிலிருந்து உயர்த்துகிறார்- 2
கர்த்தர் உனக்கு பெரிய காரியம் செய்வார்
ஆறுதல் தந்து அதிசயமாய்
உன்னை நடத்துவார் -2