amarntha melliya saththam – Amarndha Melliya Satham

அமர்ந்த மெல்லிய சத்தம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அமர்ந்த மெல்லிய சத்தம் – Amarndha Melliya Satham
அமர்ந்த மெல்லிய சத்தம்
அன்பாக உன் காதில் தொனிக்கின்றதா
அதையே தள்ளிடாதே
அதையென்றும் தள்ளிடாதே
அதை நீ தள்ளிடாதே
அலட்சியம் செய்திடாதே
1.உன் அக்கிரமம் மன்னிக்கப்படும்
உன்னதமானவர் மறைவில் இருப்பாய்
நீர்பாய்ச்சலான தோட்டத்தை போல
வாழ்நாளெல்லாம் வாழ்ந்திடுவாய் -2
2.உன் பாவங்கள் மூடப்படுமே
சர்வவல்லவரின் நிழலில் தங்குவாய்
வற்றிடாத நீர் ஊற்றினை போல
வரும் நாளெல்லாம் வாழ்ந்திடுவாய் -2
3.உன் பாவத்தை எண்ணமாட்டாரே
உன்னை காகின்றவர் என்றுமே உறங்கார்
நீர்க்காலில் நாட்டிய மரத்தை போல
நீடித்த நாட்கள் வாழ்ந்திடுவாய்