Ammavai Ethirpaarthu

அம்மாவை எதிர்பார்த்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அம்மாவை எதிர்பார்த்து
அப்பாவை எதிர்பார்த்து
வாழ்ந்தது போதும்பா
இயேப்பாவை எதிர்பார்த்து
வாழக் கூடிய கிருபை தாங்கப்பா
கிருபை தாங்கப்பா எனக்கு
கிருபை தாங்கப்பா…
யோசேப்பு கூட இருந்தது போல
என் கூட இருந்திடுங்க
தாவீது கூட நடந்தது போல
என்னோட நடந்திடுங்க (2)
ஆகாரின் அழுகுரல் கேட்டதுப் போல
என் ஜெபத்தை கேட்டிடுங்க
லீதீயாளின் இதயத்தை திறந்ததுப் போல
கண்கள திறந்திடுங்க (2)
மோசே கூட பேசியதுப் போல என்கூட பேசிடுங்க
ஏனோக்கு கூட வாழ்ந்ததுப் போல என் கூட வாழ்ந்திடுங்க (2) -அம்மாவை