Ammavin Paasathilum Um Paasam song lyrics

அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதே
அப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2
மாறாத பாசம் மறையாத நேசம்
இயேசப்பா உங்க அன்பு தான் -2
1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்
மரித்த அன்பு இயேசுவே
பாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்
பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம்
2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்
மனசே உடையுதே அப்பா
இரத்தம் சிந்தினதை காயங்களும்
பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத பாசம்
3.இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான்
ஒருபோதும் கைவிடவில்லையே
இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான்
ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே-2- மாறாத பாசம்